வெள்ளி, 11 மே, 2012

ரிசர்வ்வங்கி ----புதிய கொள்கைகள்

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில்

ரிசர்வ்வங்கி ,சமீபத்தில்அறிவித்த

புதிய கொள்கைகள்,

வங்கிப் பயனாளிகளுக்கு பல நன்மைகளை

தருவதாக இருக்கிறது என்கிறார்கள்.


1. வீட்டு கடன் தொடர்பாக -

மாறும் வட்டி விகிதத்தில் [ floating interest rate]

 வீட்டு கடன் வாங்கியவர்கள்

விரும்பினால் முன்கூட்டியே கடனை

முழுமையாக திரும்ப செலுத்தலாம்.

அதற்கு முன் போல் அபராத

கட்டணம் செலுத்தத் தேவையில்லை.


2. வங்கி கணக்கு துவங்க-

வங்கி கணக்கு துவங்க குறைந்த பட்ச

இருப்புத் தொகை ஆக ரூ.1000-5000 வரை

வைத்துக் கொள்ள வேண்டும்.

இதுவும் வங்கிக்கு வங்கி மாறலாம்.

சில அடிப்படை வசதிகளுடன் கூடிய

அடிப்படை சேவிங்ஸ்  டெபாசிட் கணக்குகளை

எவ்வித குறைந்த பட்ச இருப்புத் தொகை


இல்லாமலே இனி வைத்துக் கொள்ளலாம்

என ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.


இதனால் வங்கி கணக்கு தொடங்க

பண வசதி இல்லை என்பது

ஒரு தடையாக இருக்காது.


3. வங்கி சேவைக்கு-


வங்கி வாடிக்கையாளர் அனைவருக்கும்

தனி அடையாள எண்

[Unique Customer identification code number]

வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க

ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள்  


தங்களுக்கு தேவையான சேவையை

பெறுவது எளிதாகும்.


மேற்கூறிய மூன்று புதிய வசதிகளால்

வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கும் 


வங்கிகளுக்கும் இடையே நம்பிக்கையும்,

நல்லுறவும் மேலோங்கும் .

வங்கி சேவை வரலாற்றில் இது

ஒரு திருப்ப முனை எனலாம்.


மேலும் சென்ற 19 மாதங்களில்

13 முறை ரிசர்வ்வங்கி 


வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில்

முதன் முறையாக தனது கடன்கொள்கையில்

'ரெப்போ' வட்டியை 1/2% குறைத்துள்ளது.

[ 8.50% லிருந்து 8%ஆக ]

இந்த வட்டி குறைப்பின் பயனாக 


வீ ட்டுக் கடன், வாகனக் கடன்,

தனி நபர் கடன் மற்றும்

தொழில்  கடன் ஆகியவற்றின்

வட்டி வீதம் 1/4% முதல் 1/2% வரை குறையும்

அறிவிப்பு வந்தவுடனேயே சில

வங்கிகள் வீ ட்டுக் கடன், வாகனக் கடன்


 வட்டி வீதத்தை 1/4% முதல் 3/4% குறைத்து விட்டது. 


மீதமுள்ள வங்கிகள் விரைவில் மேற்கொள்ளும்

வட்டிக் குறைப்பு சதவீதம்

கடன் தொகையின் அளவு

மற்றும் திரும்ப செலுத்துவதற்கான

காலக் கெடுவை பொறுத்து அமையும்

 ரிசர்வ்வங்கியின் கடன் கொள்கை


இரண்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்டது
.
1.வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன்கள்

தடை இன்றி கிடைக்க வேண்டும்.

2. பண வீக்கத்தையும், விலைவாசியையும்

கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும்.

ஓரிரு மாதங்களுக்கு முன் இருந்த

நிலையோடு ஒப்பிடுகையில்

தற்போது பணவீக்க விகிதம் குறைந்துள்ளது

ஆனால் வளர்ச்சி நிலையில் தேக்க நிலை

ஏற்படக்கூடாது என்பதற்காக

வட்டி குறைக்கப் பட்டு உள்ளது.

பல வருடங்களுக்குப் பின்

இந்த கடன் கொள்கை உற்சாகப்படுத்திஉள்ளது.

அதேபோல் இதனால் பாதிப்பு

அடைபவர்களும்   உண்டு.

ஏனென்றால் கடனுக்கு வட்டி குறையும்போது

டெ பாசிட்களுக்கான வட்டியும் குறையும்.

இதனால் சிறு சேமிப்பாளர்கள்,

மூத்த குடிமகன்கள் பாதிக்கப் படுவார்கள்.

டெ பாசிட்களுக்கான வட்டி

உடனடியாக குறையுமா?

நாளடைவில்     குறையுமா ?


எந்த அளவில் குறையும் ?

பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அந்தந்த வங்கியின் நிதி ஆதாரம்,

கடன்களுக்கான தேவை,

பணச் சந்தையில் வங்கிகள்

வாங்கக்கூடிய குறுகிய கால

கடன்களுக்கான வட்டி விகிதம்

என பல அம்சங்களை பொறுத்தே

டெ பாசிட்களுக்கான வட்டி

கணக்கிடப்படும்.

கடந்த காலங்களில் இதுபோன்ற

தருணங்களில்  டெ பாசிட்வட்டி

குறையாமலும் இருந்து உள்ளது.

வெள்ளி, 4 மே, 2012

குங்குமப் பூ

குங்கும பூவின்நிறம்நாம்

நினைப்பதுபோல்சிவப்புஅல்ல.

ஊதாநிறமானது.

சிவப்பு சூலக முடிகளுடன் காணப்படும் குரோக்கசு சட்டைவசு பூ



இந்த படத்தில்நாம்பார்க்கும் சிவப்பு நிறமான பகுதி மகரந்தங்கள்'

அதன் இதழ்கள் அல்ல.

குங்கும மலரின்மகரந்தங்களைத்தான் ,

குங்குமப்பூஎன்ற பெயரில்பயன்படுத்துகிறோம்.

நீண்டகாலமாக உலகின் மிக விலையுயர்ந்த 

நறுமணப் பொருளாக கருதப்படுகிறது.

அதன் கசப்புச் சுவைக்கு அதில் உள்ள 

பைக்ரோக்குரோசின் (picrocrocin),

அதன் வைக்கோல் போன்ற மணத்திற்கு

சாஃபிரானல் (safranal) ஆகிய வேதிப் பொருள்களே காரணம்.

அதில் உள்ள கரோடின்வகை சாயமான

குரோசின் (crocin) இருப்பதால் 

அது உணவு வகைகளுக்கும்

துணிகளுக்கும் 

தங்கம் போன்ற-மஞ்சள் வண்ணத்தைதருகிறது.


கோலர்'ஸ் மெடிக்கல் பிளாண்ட்ஸ் (1887) இலிருந்து குரோக்கசு சட்டைவசு
வீட்டில் வளர்க்கப்படும் சாஃப்ரன் குரோக்கசு செடியானது

இலை உதிர் காலத்தில் பூக்கும் பல்லாண்டு கால தாவரம்.


இது காட்டில் வளர்வதில்லை


புதிய செடி உருவாக்கல்-


நிலத்துக்குக் கீழே இருக்கும் குமிழ் போன்ற

மாச்சத்துச் சேமிக்கும் தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து,

சிறு துண்டுகளாக உடைத்து திரும்பவும் நடவேண்டும்.

இவ்வாறு நடப்படும் ஒரு தண்டுக்கிழங்கு

ஒரு பருவம் வரை வாழும்,

இவை ஒவ்வொன்றும் இம்முறையில் பிரித்து நடுவதன் மூலம்

பத்து வரையிலான புதிய தாவரங்களைக் கொடுக்கும்


இந்தத் தண்டுக் கிழங்குகள் சிறிய, பழுப்பு நிறமான 4.5 செ.மீ வரையிலான

விட்டத்தைக் கொண்ட சிறு கோள வடிவம் கொண்டவையாகும்.

இவை நார்களாலான அடர்த்தியான காப்புறையைக் கொண்டிருக்கும்.


கோடைகாலத் தூக்கத்துக்குப் பின்னர் இளவேனில் காலத்தில்,

இந்தத் தாவரத்தில் 5 முதல் 11 வரையிலான குறுகலாகவும்,

கிட்டத்தட்ட செங்குத்தாகவும்

பச்சை இலைகள் துளிர்க்கின்றன.

ஒவ்வொரு இலையும் 40 சென்டிமீட்டர் வரையிலான

நீளம் கொண்டதாக இருக்கும்.

இலையுதிர் காலத்தில் ஊதாநிற மொட்டுகள் தோன்றுகின்றன.

இவை அக்டோபர் மாதத்தில்,

(பெரும்பாலான பூக்கும் தாவரங்கள்

தமது விதைகளை வெளியிட்டுவிட்ட பின்னரே),

 மிகச்சிறந்த நிறமுடைய பூக்களை உருவாக்குகின்றன.

அவற்றின் நிறம் மென்மையான 
ஊதாவிலிருந்து

அடர்த்தியான, பல வரிகளாக அமைந்த

சாம்பல் கலந்த மென்மையான

ஊதா நிறம் வரை வேறுபடுகின்றது

பூக்கும் காலத்தில் இந்தத் தாவரங்களின்


சராசரி உயரம் 30 செண்டிமீட்டருக்கும் குறைவாக உள்ளன.



ஒவ்வொரு பூவிலிருந்தும்

மூன்று நீட்சிகளை உடைய சூல்தண்டுகள் உருவாகின்றன.

அவை ஒவ்வொன்றின் முனையிலும்

25-30 மி.மீ குறுக்களவுள்ள, பளிச்சென்று தெரியும்,

கருஞ்சிவப்பு நிறமுள்ள சூலகமுடிகள் காணப்படுகின்றன


குங்குமப்பூ சாகுபடிக்கு காலநேரமே மிக முக்கியம் -

வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும்

உலர்ந்த கோடைக்காலமும் இதற்கு மிக உகந்தவையாகும்.

பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழை பொழிவு

குங்குமப்பூவின் விளைச்சலை ஊக்குவித்து அதிகமாக்குகிறது.

பூக்கின்ற காலத்தில் மழை அல்லது குளிரான காலநிலை இருந்தால்,

அது நோயைத் தூண்டி விளைச்சலைக் குறைக்கும்.

தொடர்ச்சியான ஈரம் கொண்ட அல்லது

வெப்பமான காலநிலை தாவரங்களுக்குத் தீங்கை விளைவிக்கும்


மேலும் முயல்களும் எலிகளும் பறவைகளும்

குழிகள் தோண்டி பயிர்களை நாசம் செய்கின்றன.

இவை தவிர 
உருளைப் புழுக்களும், இலைத் துருக்களும்,

தண்டுக்கிழங்கு அழுகல்களும் பிற அச்சுறுத்தல்களாகு
ம்,

கிழங்குகள் எவ்வளவு ஆழமாக நடப்படுகின்றன,

தண்டுக்கிழங்குகளுக்கு இடையே

எவ்வளவு இடைவெளி விடப்படுகிறது,

காலநிலை ஆகிய இம்மூன்றும்

விளைச்சலைப் பாதிக்கின்ற முக்கியமான காரணிகளாகும்.

அதிக ஆழத்தில் நடப்பட்ட மூலத் தண்டுக்கிழங்குகள்

உயர் தரமான குங்குமப்பூக்களை விளைவிக்கின்றன,

எனினும் இவை குறைவான மொட்டுகளையும்

சேய்த் தண்டுக்கிழங்குகளையும் கொடுக்கின்றன. 


கோடைகாலத்தில் உறக்க நிலையில் உள்ள தண்டுக்கிழங்குகள்,

இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில்

தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து, 

மொட்டு விடத் தொடங்குகின்றன. 

இலையுதிர் காலத்தின் மத்தியப் பகுதியில் 

அவை பூக்கின்றன.

காலையில் மலரும் பூக்கள் 

மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால் 

அறுவடையை மிக வேகமாகச் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது

ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் 

எல்லாச் செடிகளும் பூக்கின்றன.

உலகளவில் ஓராண்டுக்கு கிட்டத்தட்ட 

300 டன்கள் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்படுகிறது

ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன்,

மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்) 

ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்.

பல்வேறு குங்குமப்பூ வகைகளைப் பயிர் செய்யும் 

ஈரானே அதிகமாக குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் நாடாகும்.

இந்நாடு உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில்

93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது.

ஒரு பவுண்டு (454கிராம்கள்) உலர் குங்குமப்பூவை 

உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள் தேவை. 

இது ஒரு காற்பந்து மைதானத்தின் பரப்பளவில் 

மேற்கொள்ளப்படும் பயிர் செய்கைக்குச் சமமானது

ஒரு கிலோகிராமுக்கு 110,000-170,000 பூக்கள் அல்லது 

இரண்டு காற்பந்து மைதானங்கள் தேவை) 

150,000 பூக்களைப் பறிப்பதற்கு 

நாற்பது மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது

 ஈரப்பதத்தைப் பிரித்தெடுத்தலின் மூலம் 

அடுத்து சூலக முடிகள் விரைவாக உலர்த்தப்பட்டு,

காற்றுப்புகாத கொள்கலன்களில் அடைக்கப்படுகின்றன.

பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம், 

சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை, 

உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது 

ஆகியவையே புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும்.


இதில் கால்சியம், பொட்டாசியம்,இ ரும்பு,

காப்பர், மேங்கனீஸ், செலினியம்,

துத்தநாகம், மெக்ணீஷிய ம் 

போன்ற பல தாதுக்கள் உள்ளன.

வைட்டமின்A , போலிக் அமிலம்

ரைபோபிளவின், நியாசின்,

வைட்டமின்c போன்ற 

உயிர் சத்துக்களும் க ணிசமாக உள்ளன.

நோய் எதிர்ப்பு தன்மை,

மேனி எழிலைபாதுகாப்பதிலும்

இவை பெரிதும்உதவுகின்றன.


மருத்துவத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக 

வெகு காலமாகப் பயன்பட்டுள்ளது. 

நவீன மருத்துவம் கூட குங்குமப்பூவில் புற்றுநோய் எதிர்ப்பு

விகார எதிர்ப்பு (விகாரத்தைத் தடுக்கின்ற), 

நோய் எதிர்ப்பை மாற்றுகின்ற 

மற்றும் ஆக்சிசனேற்றத் தடுப்பான்-போன்ற இயல்புகள் 

இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது

குங்குமப்பூவானது, கரும்புள்ளிச் சேதம் (macular degeneration

மற்றும் மாலைக் கண் நோய் ஆகியவற்றைக் குறைப்பது 

பிரகாசமான வெளிச்சத்தின் நேரடித் தாக்கத்திலிருந்தும் 

விழித்திரை அழுத்த நோயிலிருந்தும் 

கண்களைக் காக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன

 குங்குமப்பூ குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளில்

துணிச்சாயமாகவும் 

நறுமணப்பொருள் உற்பத்தியிலும்

பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் போலிகல் அதிகம் விற்கப்படுகிறது .

 குங்குமப்பூவுடன் பீட்டுக் கிழங்குகள், 

மாதுளை நார்கள், 

சிவப்புச் சாயமிடப்பட்ட பட்டு நார்கள் அல்லது

 சாஃப்ரன் குரோகசின் சுவையற்ற, 

மணமற்ற மஞ்சள் மகரந்தக் கேசரங்கள் கலப்பது 

பிற முறைகளில் குங்குமப்பூ இழைகள் தேன் அல்லது 

காய்கறி எண்ணெய் போன்ற பாகுப் பொருள்களில் 

ஊற வைக்கப்படுகின்றன. 

எனினும், தூளாக்கப்பட்ட குங்குமப்பூவில் 

மஞ்சள், சிவப்பு மிளகு, செறிவைக் குறைக்கின்ற

நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படும் பிற தூள்கள் 

ஆகியவற்றைக் கொண்டு கலப்படம் செய்வ து 

வேறுபட்ட தர குங்குமப்பூ வகைகளைக் கலந்து

 தவறான பெயர்ச்சீட்டுகள் ஒட்டி விற்பதன் மூலமாகவும் 

கலப்படம் செய்யப்படுகிறது

இவ்வாறு இந்தியாவில் பெரும்பாலும் 

உயர் தரமான காஷ்மீரி குங்குமப்பூவானது 

விலைகுறைவான ஈரானிய இறக்குமதி வகைக் 

குங்குமப்பூவுடன் கலக்கப்படுகிறது. 

இந்தக் கலவைகள் பின்னர் 

சுத்தமான காஷ்மீர் குங்குமப்பூ எனக் கூறி 

சந்தையிலேற்றப்படுகிறது. 

இதனால் காஷ்மீர் விவசாயிகளுக்கு 

பெரும் வருமான இழப்பு உண்டாகிறது.

குங்குமப் பூவை நீரில் போட்டால் 

நீரின் நிறம் மாறினால் அது போலி.

தரமான பூவை வெதுவெதுப்பான 

பாலிலோ, நீரிலோ போட்டால்

உடனே நிறம் மாறாது.

நன்கு ஊறி

கிட்டத்தட்ட 24 மணி நேரம்

கழிந்த பிறகு

தங்க மஞ்சள் நிறம் கிடைக்கும்.




சிறுநீரகம் (கிட்னி)



நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். 


பேச்சுவழக்கில் மூத்திர காய் என்பர். 

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் 

மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் 

இ கருவின் நான்காவது மாதத்திலிருந்து 

அதனுடைய இயக்கத்தை தொடங்கி 

மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. 

சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் 


சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு


சிறுநீரகம் (கிட்னி), 

உள்சிறுநீரக வெளியேற்று குழாய் (யுரேட்டர்), 

சிறுநீர்ப்பை (பிளாடர்), 

வெளிசிறுநீரக குழாய் (யுரித்ரா), 

நரம்பு மண்டலம் ஆகிய ஐந்தும் 

ஒருங்கிணந்ததுதான், சிறுநீரக மண்டலம்.
 
வயிற்றின் பின் பகுதியில் 

சிறுநீரகம் (கிட்னி), 

இடுப்பிற்கு சற்று மேலே

முதுகு தண்டின் இரு புறமும்

விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் 

பாதி முடப்பட்டுள்ள 

அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும்.

வலது சிறுநீரகம், இடது சிறுநீரகத்தை விட 

சற்று சிறியதாகவும், கீழேயும் உள்ளது. 

ஒரு சிறுநீரகம் சுமார் 180 கிராம் எடையும்,

10 முதல் 12.5 செ.மீ. நிளமும் 

86.5 செ.மீ. அகலமும் கொண்டது. 

கை முஷ்டி அளவு

பழுப்பு கலந்த கறுஞ்சிவப்பு நிறத்தில்இருக்கும். 




ஒவ்வொரு சிறுநீரகமும்

 சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்களைக் கொண்டது.


சிறுநீரகத்திற்கு இதயத்திலிருந்து வரும் 

முக்கிய இரத்தக் குழாயிலிருந்து 

நேரடியாக, பெரிய சிறுநீரக இரத்தக் குழாய்கள் மூலம் 

நிமிடத்திற்கு சுமார் 1,200 மி.லி. இரத்தம் பாய்கின்றது.

நெஃப்ரான்-சிறுநீரகத்தின் அடிப்படை சுத்திகரிப்பு அலகு


இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. 

இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், 

தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. 

மால்பிஜியன் குழாயின் மூலம்வடிகட்டி.

மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும்,

மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது. 



நெஃப்ரான்கள் தினமும் சுமார் 180 லிட்டர் ஊணீரை 

இரத்தத்திலிருந்து திரவமாக பிரித்தெடுக்ககின்றன. 

இதனை மற்ற நுண்ணிய குழாய்கள் 

வெறும் 1.5 லிட்டர் கழிவுப்புக்கள் மட்டும் உள்ள 

சிறுநீராக மாற்றி 

உள்சிறுநீர்க்குழாய் எனப்படும் 

இரண்டு ட்யூபுகள் மூலம் 

சிறுநீர்ப்பைக்கு சொட்டு, சொட்டாக அனுப்புகின்றன.  

சிறுநீர்ப்பையில் சிறுநீர் 300-500 மி.லி சேர்ந்தவுடன்

சிறுநீர் கழிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தவுடன் 

சிறுநீர் வெளிசிறுநீர்க் குழாய் வழியாக வெளியேற்றப்படுகின்றது.

இருதயத்தில் இருந்து ரத்தம், 

தமனிகளின் வழியாக நெப்ரானை வந்தடைகிறது. 

இங்கு ரத்தத்தின் திரவப்பகுதியான பிளாஸ்மா, குளுக்கோஸ், 

அமினோ அமிலங்கள், பொட்டாசியம், குளோரைட், 

ஆகியவை வடிகட்டப்படுகிறது. 

எஞ்சிய ரத்தம், நெப்ரானிலுள்ள 

குளோமெரூலஸ் பகுதிக்கு வந்துசேர்கிறது.
 
இதில் போடோசைட்ஸ் செல்கள் 

வடிகட்டியாக செயல்படுகிறது. 

குளோமெரூலசுக்குள் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியாத 

ரசாயன மாற்றங்களுக்கு உட்படும் ரத்தம், 

இறுதியில், `ட்யூபிள்' என்கிற நுண்குழாய்களில் வந்து சேருகிறது.
 
 டலிலுள்ள சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற 

அவசியமான சத்துகளின் அளவை கணக்கெடுக்கிறது,சிறுநீரகம். 

இவை போதுமான அளவில் இல்லையெனில்,  

அவற்றை மீண்டும் ரத்தத்தில் கலக்க செய்கிறது.
 
சரியான அளவில் இருந்தால்,

தண்ணீரில் நீர்க்கசெய்து  வெளியேற்றகிறது.

தயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் 

நான்கில் ஒரு பங்கை சிறுநீரகம் சுத்திகரிக்கிறது.

நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு 

அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது. 

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது.

இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. 

இரத்தம் சுத்தமடைகிறது. 

மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும்

சிறுநீரகத்தின் வேலைதான். 

உடலின் திரவ நிலை

இரத்த அழுத்தம்

எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பர ஸ் 

ச ம நிலைப்படுத்துகிறது.

அமில, காரத்தன்மைகளையும், 

சோடியம் பொட்டாசியம்,அம்மோனியம் போன்றவற்றை 

சரிவிகிதத்தில் சமன்செய்கிறது

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான 

சுரப்பினை சுரக்கச் செய்கிறது. 

 நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு,

உடலிருந்து வேர்வையாக வெளியேறும் நீரின் அளவு 

இவைகளை கணக்கிட்டு சிறுநீரின் அளவை கட்டுப்படுத்தி

நம் உடலின் மொத்த தண்ணீரின் அளவை

எடையில் 60% ஆக வைத்திருப்பதும் சிறுநீரகங்கள்தான்

 நாம் வேறு நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள்,

உணவுகளில் உள்ள நமக்கே தெரியாத விஷப் பொருட்கள்

ஆகியவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள் தான்.

நரம்பு மண்டலம்

சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் 

துளித்துளியாக சிறுநீர்ப்பைக்கு 

கொண்டுவந்து சேர்க்க உத்திரவளிப்பது, 

சிறுநீர்ப்பையை விரிவடைய செய்து 

சிறுநீரை தேக்கிவைப்பது, 

சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் 

மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளை செய்வது நரம்பு மண்டலமே.

அட்ரினல் சுரப்பி:




கிட்னிகளுக்கு மேல்பகுதியில் இருக்கும். 

 உடம்பில் நீர்ச்சத்து, 

உயிர்ச்சத்துகளை கண்காணிப்பது, 

ரத்த அழுத்தம்-ரத்தக்குழாய்களை பராமரிப்பது 

ஆகிய பணிகளை செய்வது, அட்ரினல் சுரப்பிதான். 

தேவைப்படும் நேரத்தில் 

மனிதனின் இதயவேகத்தை அதிகரித்து, 

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட சுரப்பி இது.
 

புராஸ்ட்டேட் சுரப்பி:


சிறுநீர்ப்பையின் (பிளாடர்) கீழ்புறத்தில் 

யூரித்திராவைச் சுற்றி அமைந்துள்ளது. 

இது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிற உறுப்பு! 

புரஸ்டேட்டில் இருந்து புரஸ்டாடிக் அமிலம் சுரக்கிறது. 

இதுதான் பிளாடரின் செயல்பாடுகள், 

சிறுநீர்பை நிறைவை மூளைக்கு தெரியப்படுத்தி 

வெளியேற்றுவது ஆகிய பணிகளை செய்கிறது.
 
சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்.

· இரத்தம் அசுத்தமாகும்

· இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும்.

· தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் 

சமநிலை பாதிக்கப்பட்டு, 

உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.

· மூச்சுத் திணறல், நினைவிழத்தல் 

இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் 

அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் 

சிறுநீர் சரியாக பிரியாது. 

சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், 

அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல்,

விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், 

குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, 

தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற 

ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் 

உடனே மருத்துவரை அணுகி 

பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

 யாருக்கு அதிகம் பாதிப்படையும்: 

சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். 

பரம்பரை

இரத்தக் கொதிப்பு, 

பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, 

மலேரியா, 

உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், 

வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், 

பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, 

அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும்,

நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும்,

மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும்,

அடிக்கடிவலிநிவாரணமாத்திரைகளைபயன்படுத்துபவர்களுக்கும், 

உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் 

சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு. 

சிறுநீரகத்தைக் காக்க: 


* உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் 


பார்த்துக் கொள்வது அவசியம். 

* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.


மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது. 

* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை 


உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. 


சிறுநீரை அடக்குதல் கூடாது. 

* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. 

* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை 


உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் 


பொதுவாக வாழைத்தண்டு 3 விரலளவு எடுத்து 


அதனுடன் சின்ன வெங்காயம் 4, 


சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, 


நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, 


கொத்துமல்லி இலை தேவையான அளவு, 


கறிவேப்பிலை 20 இலை, 


இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து


 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 


1 குவளை அளவு வந்தபின் எடுத்து 


காலை மாலை இருவேளை என 


வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் 


சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். 


இது பக்க விளைவில்லாத மருந்தாகும்.