திங்கள், 25 ஜூன், 2012

படிப்புகள்

கல்வியாளர் மற்றும் 'இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ அமைப்பின் நிறுவனர் நெடுஞ்செழியன்!
''பொறியியல் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. 
ஆனால், மற்ற படிப்புகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. 
ஆசிரியப் பணிக்குத் தயார்படுத்தும் 
பி.எஸ்சி, பி.எட் - இன்டக்ரேட்டட் கோர்ஸ், 
லெதர் டெக்னாலஜி துறையில்  பி.எஸ்சி, ஃபுட்வேர் டிசைன், 
கட்டடத்துறையில் பி.ஆர்க், 
மருத்துவ அறிவியலில் எம்.பி.பி.எஸ் மட்டும் அல்லாமல் 
ஃபார்மசூட்டிக்கல், ஃபிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, 
பேத்தாலாஜி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி என்று விரிந்திருக்கும் களம்"என்கிறார். 

பி.எஸ்சி, பி.எட்

ஆசிரியப் பணியின் தரத்தைக் கூட்ட மத்திய அரசாங்கத்தால்
நான்கு வருட டீச்சர் டிரெயினிங் கோர்ஸ்கள் வழங்கப்படுகின்றன. 
ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன்’
புவனேஸ்வர், மைசூர், ஷில்லாங், 
போபால், அஜ்மீர் போன்ற இடங்களில் உள்ளது. 
நான்கு வருட இன்டக்ரேட்டட் கோர்ஸ் து.

கல்வித் தகுதி-

ப்ளஸ் டூ-வில் பயாலஜி, சயின்ஸ் அல்லது 
காமர்ஸ் குரூப் எடுத்துப் படித் திருக்க வேண்டும். 
50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டியதும் முக்கியம்.
எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள 
பாடத்திட்ட முறைகள் கற்றுத் தரப்படுவதால், 
இங்கு படிக்கும் மாணவர்கள் எந்த மாநிலத்திலும் 
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றலாம். 
மத்திய, மாநில அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு 
இக்கல்லூரியில் கோர்ஸ் முடித்தவர்களுக்கு 
முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால், 
100% வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமுண்டு. 

மேலும் விவரங்களுக்கு, 
கல்லூரி இணையதள முகவரி:
புவனேஸ்வர் -http://as.ori.nic.in/riebbs/Courses.html 
மைசூர் - http://www.riemysore.ac.in/

லெதர் டெக்னாலஜி
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது, 

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் உள்ள 
'ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்'. 
தோல் பொருட்கள் தயாரிப்புப் பற்றி இங்கு கற்றுத் தரப்படும் 
மூன்று வருட பி.எஸ்சி-யானது... 
ஃபுட்வேர் டிசைன், ஃபுட்வேர் டெக்னாலஜி, 
ஃபுட்வேர் மேனுஃபேக்சரிங், ரீடெய்ல் மேனேஜ்மென்ட் என 
பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 
ப்ளஸ் டூ-வில் எந்த குரூப் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். 
இதற்காக பிரத்யேக நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். 
'எஃப்.டி.டி.ஐ’ (FDDI-Footwear Design and Development Institute) என்று 
அழைக்கப்படும் அந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை 
மே மாத இறுதிக்குள் அனுப்பவேண்டும். 
தேர்வில் ஆங்கிலம், மேத்ஸ், ஜெனரல் சயின்ஸ், ஜெனரல் அவேர்னஸ் 
போன்ற பாடங்களில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 
இரண்டரை மணி நேரம் நடக்கும் 
இந்த நுழைவுத் தேர்வு... ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடக்கும்.
 தகவல்களுக்கு: http://www.fddiindia.com. 
இக்கல்லூரியின் கிளை, சென்னை அருகேயுள்ள 
இருங்காட்டுக்கோட்டையிலும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக